sevvaai dosham parigaram :: செவ்வாய் தோஷம்:

செவ்வாய் தோஷம்: 

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திரு மணம் செய்யக் கூடாது என சோதிடம் கூறு கிறது. லக்கனம், சந்திரன், சுக்கி ரன், முதலி யவை களுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங் களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். 

அப்படி மீறித் திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் திசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது. 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக் கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. 

இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். குரு, சூரியன், சனி, சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை. 

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது. சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. 2-வது இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகியவற்றில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. 4-ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. 

7-ம் இடம் கடகம், மகரம் செவ்வாய் ஆகியவற்றில் இருந்தாலும் தோஷமில்லை. 8-ம் இடம் தனுசு, மீனம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. பெண்களின் ஜாதகத்தில் 7-ம், 8-ம் இடங்கள் கெட்டிருந்தாலும் லக்கினாதிபதி, 7-ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும், 12-ம் இடத்தில் ராகு, 6-ம் இடத்தில் கேது அமையப்பெற்ற பெண்களும், 7-ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் பாதிப்பு ஏற்படும். 

பரிகார காலம்: செவ்வாய்க்கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் பரிகார பூஜை செய்வது சிறப்பு. பொதுவாக செவ்வாய் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம்.


செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.


For booking pooja in vaitheeswaran temple contact us in doshanivarthi@gmail.com

No comments:

Post a Comment