செல்வம் செழிக்கவும் நோய்கள் விலகவும் வழிபட வேண்டிய கோவில் :: அக்னீஸ்வரர் திருக்கோவில்.








செல்வம் செழிக்கவும் நோய்கள் விலகவும் வழிபட வேண்டிய கோவில்:
          வாழ்வில் செல்வம் செழிக்கவும் , நோய்கள் தீரவும் வழிபட வேண்டிய கோவில் தான் அக்னீஸ்வரர் திருக்கோவில்.
எங்கு உள்ளது:
          இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் என்ற ஊரில் உள்ளது.
எப்படி செல்வது:
             கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறி கஞ்சனூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம்.
சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:
             இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் அக்னீஸ்வரர் என்றும் அம்பிகை கற்பகாம்பிகை என்ற பெயருடனும் அழகுற காட்சி தருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
                முன்னொரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த வாசுதேவர்  என்பவருக்கு சுதர்சனன் என்ற ஒரு மகன் உண்டு . அவன் வைணவ மதத்தில் இருந்தாலும் சிவ பெருமான் மீது மிகுந்த பற்றில் இருந்தான் .  திருநீறு, ருத்திராக்ஷ்ம் மட்டுமே அணிவான். ஒருநாள் வசுதேவர் சுதர்சனனை அழைத்து சிவ பெருமானை வழிபடுவாயா என்று இரும்பு கம்பியினை பழுக்க காய்ச்சி  சூடு வைத்தான். மகனோ சிவ பெருமானுக்கு  அனைத்தும் என்று கூறியது இந்த கோவிலில் உள்ள சிற்ப வடிவில் உள்ளது.

  அந்த கோவிலே சிவ பெருமான்  கோவிலாக
மாறியது. பிறகு சுதர்சனன் என்ற பெயர் ஹரதத்தர் என்ற பெயர் கொண்டு சிவ தீக்ஷை  எடுத்தார். அந்த ஊரில் வசிக்கும் ஒரு செல்வம் மிகுந்த ஒருவர் தினமும் சிவ பெருமானுக்கு அன்னம் வைப்பது  வழக்கம்.சிவ பெருமானும்  அதனை  கனவில் வந்து சாப்பிடுவது போன்று சிவ பெருமான் காட்சி  தருவார். ஒருநாள் சிவ பெருமான் கனவில்  வரவில்லை. இதனால்  அறிய கோவிலுக்கு சென்றார் அந்த செல்வந்தர் அப்போது சிவ பெருமான் ஹரதத்தர் என்பவர் தனக்கு கஞ்சி கொடுத்ததாகவும்  அதனை குடித்ததால் தனக்கு  பசி  எடுக்கவில்லை  என்றும் கூறினார். ;இதனால் செல்வந்தர் ஹரதத்தரை தேடி சென்று
வணங்கினார்.
சுரைக்காய் பக்தர் :
       இந்த ஊரில் சுரைக்காய் விற்கும் ஒருவர் சிவ பெருமான் மீது அதீத பற்றில் இருந்தார். அவர் ஒரு நாள் சுரைக்காய் அனைத்தையும் விற்று  ஒரே ஒரு  சுரைக்காய் மட்டும் விதைக்கு வைத்து இருந்தார். அப்போது சிவ பெருமான் அந்தணர்  ரூபத்தில் வந்து கேட்க நீங்கள் சுரைக்காய் சாப்பிட கூடாது என்று கூறினார். பிறகு பாதி விதைக்கு என்றும் மீதி கறிக்கும் என்றும் கூறினார். பிறகு அவருக்கு சிவ பெருமான்  அருள்புரிந்தார்.
கல்  நந்தி :
       பிராமணர் ஒருவர் புல் கட்டு தூக்கி கொண்டு செல்லும்போது அந்த புல் கட்டு கீழே விழுந்து ஒரு பசு மாடு இறந்து விட்டது. பசு மாடு இறந்ததால் அவர் பிராமண சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டார். மேலும் அவருக்கு பசு தோஷம் தொற்றியது. இதனால் செய்வதறியாது ஹரதத்தரிடம் முறையிட்டார். ஹரதத்தரை காண செல்லும் வழியில் சிவனுக்கு பிடித்த ஸ்லோகமான சிவ பஞ்சாட்சரத்தை கூறிக்கொண்டே சென்றார். இதனை கண்டா ஹரதத்தர் பஞ்சாட்சரம் சொன்னதால் பசு தோஷம் விலகியது என்று கூறினார்.
        ஆனால் மற்றவர்கள் இதனை ஏற்க வில்லை. பிறகு ஹரதத்தர் இந்த குளத்தில் நீராடி விட்டு சிவ பெருமானின் முன் உள்ள நந்திக்கு  ஒரு புல் எடுத்து கொடு அந்த நந்தி புல்லை சாப்பிட்டால் உனக்கு அந்த தோஷம் போய்விட்டது என்று அர்த்தம் என்று கூறினார். பிராமணரும் அவ்வாறே செய்தார். கல் நந்தி புல் சாப்பிட்டு அவரின் தோஷத்தை போக்கியது என்று வரலாறு கூறுகிறது.
சிவபெருமானின் அமைப்பு:
       இந்த கோவிலில் சிவ பெருமான் சுயம்பு  உள்ளார். மேலும் இங்கு உயர்த்த கோலத்தில் பாணம் ஏந்தி நின்ற வடிவில் காட்சி தருவது மிக சிறப்பாக உள்ளது.
கோவில் அமைப்பு :
        இந்த கோவிலில் விநாயகர், முருகர், மஹாலக்ஷ்மி ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
வேண்டுதல்கள்:
          இந்த கோவிலுக்கு அதிகமாக செல்வம் செழிக்கவும்  நோய்கள் தீரவும் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்த்திரம் சாற்றி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
ஸ்தல வரலாறு மற்றும் திருக்குள தீர்த்தம்:
           ஸ்தல விருக்ஷமாக பலா மரமும் புரசை மரமும், திருக்குள தீர்த்தமாக அக்னீ தீர்த்தமும் , பராசர தீர்த்தமும் உள்ளது.
விசேஷே தினங்கள்:
       மாசி மகம், ஆடிப்பூரம், தை மாதம் திங்கள் கிழமை ஹரதத்தர் காட்சி, நவராத்திரி, பிரதோஷம் ஆகிவை வெகு சிறப்பாக கொண்டாடாடுகின்றனர்.

நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில் :: சூரினார் கோவில்

நவகிரஹ தோஷங்கள் நீங்கவும் கடன் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய கோவில்:

       நவகிரஹங்கள் தோஷங்கள் அனைத்தும் போகவும் வாழ்வில் செல்வம் செழிக்கவும் வழிபட வேண்டிய கோவில் தான் சூரினார் கோவில்.

எங்கு உள்ளது:

         இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவில் என்ற இடத்தில் உள்ளது.

எப்படி செல்வது:

              இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் உண்டு. கும்பகோணத்தில் இருந்து திருமங்கலக்குடி காளி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

             இங்குள்ள சிவ பெருமான் சிவசூரியன் என்றும் அம்பாள் உஷாதேவி, சாயாதேவி என்ற பெயர் கொண்டும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

ஸ்தல சிறப்பு :

           இந்த கோவிலில் ஏழரை சனி , அஷ்டமத்து சனி மற்றும் கிரக தோஷங்கள் யாவும் விலக இங்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.

ஸ்தல வரலாறு:

        முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவர் மிக சிறந்த பக்திமான் ஆவர். அவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. அதனால் இங்குள்ள நவகிரஹங்கள் அனைத்தையும் வேண்டி தவம் மேற்கொண்டார். நவகிரஹங்களும் முனிவருக்கு காட்சி தந்து தொழுநோயை இருந்து விடுவித்தது. இதனை கண்ட பிரம்மா கோபம் கொண்டார்.

            பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் தான் அவரவர் வாழ்வு அமையும். ஆதலால் என் காலவ முனிவருக்கு நோயிலிருந்து விடுதலை அளித்தீர்கள் என்று நவகிரஹங்களுக்கு அந்த நோய் பற்றி கொள்ளுமாறு சாபம் கொடுத்தார். பிறகு நவகிரஹங்கள் அனைத்தும் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு சாப விமோசனம் பெற்று கொண்டதால் இந்த தளத்தில் நவகிரஹங்கள் அனைத்திற்கும் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது வரலாறு.

சூரியனின் தோற்றம்:

        சூரியனுக்கு இரண்டு இடத்தில் மட்டுமே கோவில் உண்டு. ஒன்று சூரியனார் கோவில் மற்றொன்று கோனார்க் கோவில். இங்கு சூரியன் சாந்தமாக தனது இரு மனைவியருடன் காட்சி தருகிறார்.

தோஷம் நீங்க:

           இங்கு தோஷங்கள் யாவும் நீங்க பன்னிரண்டு ஞாயிறு கிழமை இந்த கோவிலுக்கு வந்து நீராடி மனதார வணங்கினால் தோஷம் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்கள்:

           இந்த கோவில்களில் நவகிரஹ தோஷத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சக்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து அன்னதானம் செய்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

         இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக வெள்ளெருக்கு உள்ளது. மற்றும் திருக்குள தீர்த்தமாக சூரிய தீர்த்தம் உள்ளது.

விஷேஷ தினங்கள்:

           ரத சப்தமி மற்றும் தை மாதம் பத்து நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

குழந்தை பேறு கிட்டிட இருக்க வேண்டிய விரதம் தான் கந்த ஷஷ்டி விரதம் ::

குழந்தை பேறு கிட்டிட இருக்க வேண்டிய விரதம் தான் கந்த ஷஷ்டி விரதம்:
Image result for murugan images

கந்த ஷஷ்டி விரதம்:

            குழந்தை பேறு கிட்டிட இருக்க வேண்டிய விரதம் தான் கந்த ஷஷ்டி விரதம். கந்த ஷஷ்டி விரதம் இருப்பதால் முருகனே குழந்தை வடிவில் பிறப்பர் என்பது ஐதீகம்.

பழமொழி:

           சஷ்டியில் இருந்தால் தான் கருப்பையில் வரும் என்பது மருவி சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்றானது. அதாவது முருகனுக்கு ஷஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும் என்பது ஐதீகம்.

யார் கடைபிடிக்கலாம்:

           இந்த விரதத்தை பெரும்பாலும் திருமணம் ஆன பெண்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் முன்னொரு காலத்தில் முனிவர்களும் தேவர்களும் கடைபிடித்த விரதம் ஆகும்.

ஷஷ்டி விரதம் இருக்கும் முறை:

         ஷஷ்டி விரதம் இருக்கும் முந்தய நாள் வீட்டினை கழுவி சுத்தமாக்க வேண்டும். பிறகு மஞ்சள் கலந்த நீர் கொண்டு தெளிக்க வேண்டும்.மேலும் மறுநாள் அதிகாலை தலைக்கு குளித்து விட்டு காலை மற்றும் மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்றி தேவாரம் அல்லது பாடி விட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு
7298999799

கடன் தொல்லை நீங்க பரிகாரங்கள் ::







கடன் தொல்லை நீங்க பரிகாரங்கள் :

        கடன் என்பது ஒரு மனிதனை வாட்டி வதைக்கும் ஒன்றாகும். ஒருவருக்கு கடன் மேலும் மேலும் இருந்து கொண்டே இருந்தால் நாமே சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு வாழ்வில் இன்பம் பெறலாம்.

குலதெய்வ வழிபாடு:

        முந்தைய பிறவியில் செய்த பாவங்கள் அதிகமாக இருந்தால் இந்த பிறவியில் கடன் பட்டு இருப்பர் என்பது ஐதீகம். ஆதாலால் முதலில் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு என்பது குடும்பம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை சிறந்து விளங்க குலதெய்வ  வழிபாடு என்பது முக்கியம்.

         மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலம் கடன் சுமை குறையும். மூன்று பவுர்ணமி குலதெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியம். கடன் சுமை படி படியாக குறையும்.

தொலைவில் இருந்தால்:

      குலதெய்வம் அருகில் இல்லாமல் தொலைவில் இருந்தால் இல்லத்தில் குலதெய்வ படத்தினை வைத்து  ஒன்பது பவுர்ணமி தினத்தில் பஞ்ச முகம் எனப்படும் ஐந்து முகம் விளக்கு ஏற்றி வழிபாட்டு வந்தால் கடன் தொல்லை முழுவதுமாக குறையும் . இதேபோல் ஒன்பது பவுர்ணமி வழிபாடு செய்ய வேண்டும். விளக்கு ஏற்றுவதற்கு நெய் பயன்படுத்த வேண்டும்.

காளிக்கு மாலை :

          மேலும் மூன்று வார வியாழ கிழமை அன்று சுமார் நாற்பத்தியெட்டு எலுமிச்சம் பழம் கொண்டு  மாலை தொடுத்து காளிக்கு சாற்றி வழிபட்டால்  கடன்  தொல்லையில் இருந்து மீளலாம்.
கடன் தொல்லை தீர்க்கும் மந்திரம்:

          ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதியே வர வரத சர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா
ஹிருயாதி ந்யாஸ நிக்விமோக

   இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு 108 முறை சொன்னால் கடன் தொல்லை தீரும்.

லட்சுமி நரசிம்மர்:

       கடன் தொல்லையில் இருந்து மீள லட்சுமி நரசிம்மருக்கு பசும்பாலை காய்ச்சி அதனை நாற்பத்தி எட்டு நாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். அல்லது பானகம் எனப்படும் எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் கலந்தவையை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.
ஸ்லோகம்  சொல்ல முடியாதவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை நூற்றி எட்டு முறை சொல்ல வேண்டும்.

குழந்தை பாக்கியம் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ::


Image result for குழந்தை

குழந்தை பாக்கியம் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

             குழந்தை பாக்கியம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக இன்றியமையாத ஒரு வரப்பிரசாதமாகும்.  திருமணம் ஆன அடுத்த  வருடம் குழந்தை பெற்றிட வேண்டும். அப்போதுதான் கணவன் மனைவிக்கு இடையில் வரும் சண்டை சச்சரவுகள் குறைந்து  இரு வீட்டாரின் அன்பு கிட்டும் என்பது சான்றோர் வாக்கு.


Image result for ஹோமம்

குழந்தை பாக்கியம் பெற ஹோமம்:

             திருமணம் நடந்து நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்க்கு நடத்தப்படும் ஹோமம் தான் மங்கள சமஸ்ஹரன ஹோமம். இந்த ஹோமம் வீட்டில் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
இந்த ஹோமத்திற்கு கணவன் மற்றும் மனைவி சேர்ந்து நடத்த வேண்டும்.

Image result for healthy food


திருமணம் ஆன பெண்கள்:

            மேலும் திருமணம் ஆன பெண்கள் சத்து மிகுந்த உணவுகளை உண்ண வேண்டும். மேலும் திருமணம் ஆன பெண்களுக்கு ரத்த நாளங்கள் மற்றும் மூளைக்கு செல்லும் நரம்புகள் சத்து மிக்கதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சீக்கிரம் குழந்தை பேறு கிட்டும் என்று அறிவியல் ரீதியில் உள்ளது.

ஜாதகத்தில் உள்ள பலன்:

             மேலும் குழந்தை பேறு கிட்டிட அவரவர் ஜாதகத்தில் குரு பலம், சுக்கிர பலம், சனி பலம் மற்றும் செவ்வாய் பலம் அதிகமாக இருந்தால் திருமணம் ஆன அடுத்த மாதமே கரு உண்டாகும் என்பது ஐதீகம்.

புத்திர தோஷம்:

            புத்திர தோஷம் என்பது ஒருவரின் ஜாதகத்திலோ அல்லது சாபத்திலோ உள்ளது. புத்திர தோஷம் என்பது எட்டு வகை உள்ளது.
அவை :
   பித்ரு சாபத்தினால் வரும் புத்திர தோஷம்.
    சர்ப்பத்தின் சாபத்தினால் வரும் புத்திர தோஷம் 
மாத்ருக்களின் சாபத்தினால் வரும் புத்திரதோஷம் 
சகோதரரின் சாபத்தினால் வரும் புத்திர தோஷம் 
பிராமண சாபத்தினால் ஏற்படும் புத்திர தோஷம் 
மாதுல சாபத்தினால் வரும் புத்திர தோஷம்  
மந்திரத்தினால் வரும் புத்ரு தோஷம் 
பிரேதத்தினால் வரும் புத்திர தோஷம் 
பத்தினியால் வரும் புத்திர தோஷம்

Image result for rameswaram sea

புத்திர தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்:
     
        புத்திர தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்களில் மிகவும் முக்கியமானது ராமேஸ்வரம். ராமேஸ்வரத்தில் உள்ள குளத்தில் சுமார் இருபத்தியொரு முறை மூழ்க வேண்டம். ஒவ்வொரு முறை மூழ்கும் போதும்   ஓம் பவ சிவ என்பதை கூற வேண்டும் . மேலும் அந்த கோவிலில் உள்ள இருபத்தி ஒரு கிணற்றிலும் குளிக்க வேண்டும். பிறகு  அங்கு உள்ள  சிவ பெருமானை மனதார வேண்டி கொள்ள வேண்டும். முடிந்தால் தியானம் செய்யலாம்.
         இவ்வாறு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.


திருமண தடை மற்றும் குழந்தை பேரு கிட்டிட வழிபட வேண்டிய கோவில் :: ஏகாம்பரேஸ்வரர் கோவில்.


Image result for ஏகாம்பரேஸ்வரர் கோவில்


திருமண தடை மற்றும் குழந்தை பேரு கிட்டிட வழிபட வேண்டிய கோவில்:

      திருமணத்தடை நீங்கவும் மற்றும் குழந்தை பேரு பெற்றிடவும் வழிபட வேண்டிய கோவில் தான் ஏகாம்பரேஸ்வரர் கோவில்.

எங்கு உள்ளது:

         இந்த கோவில் காஞ்சிபுரம் என்ற ஊரில் உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தே செல்லலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்:

             இக்கோவிலுக்கு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும் .

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

             இக்கோவிலில் உள்ள சிவ பெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்றும் அம்பிகை காமாட்சி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

கோவில் பெருமை:

           இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் சுயம்பு லிங்கம் ஆகும். மேலும் இந்த கோவில் திருமணம் கைகூடிடும் தலமாக உள்ளது.

ஸ்தல வரலாறு:

      முன்னொரு காலத்தில் கைலாய மலையில் சிவ பெருமான் தவத்தில் இருந்த போது பார்வதி தேவி சிவ பெருமானின் கண்களை கட்டி விட்டார். இதனால் கிரஹங்கள் நிலைகொண்டன. ஏதும் இயங்கவில்லை . தனது தவறை எண்ணிய பார்வதி தேவி சிவ பெருமானிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு சிவ பெருமான் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறி பூலோகம் சென்று அங்குபோய் என்னை பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம் என்று கூறினார்.
       
         அதன் படியே அம்பாளும் சிவ பெருமானிடம் எந்த இடத்தில் தவம் இருக்க வேண்டும் என்று கேட்டார். அதன்படியே சிவ பெருமானும் காஞ்சிபுரத்தில் இருக்கும் இந்த இடத்தில் தவம் மேற்கொள்ள கூறினார்.
     
               பிறகு அம்பிகை இந்த இடத்தில் வந்து மணலால் லிங்கம் அமைத்து அந்த லிங்கத்தின் முன் பஞ்ச அக்கினி கொண்டு அதன் மேல் நின்று தவம் புரிந்தார். பிறகு அந்த தவத்தினை சோதிக்க சிவ பெருமானின் தலையில் உள்ள கங்கையினை பூமியில் ஓட விட்டார்.  அம்பாள் வெள்ளம் வருவதை எண்ணி அந்த மணல் லிங்கத்தை தனது நெஞ்சின் மேல் அனைத்து கொண்டார். பிறகுபார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவ பெருமான் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்


Image result for மாமரம்:


மாமரம்:

       முன்னொரு காலத்தில் இந்த இடம் முழுவதும் ஒரே மாமரமாக காணப்பட்டது.  காலப்போக்கில் அனைத்து மாமரங்களும் அழிந்து இப்போது ஒரே ஒரு மரம் மட்டும் உள்ளது. அந்த மரம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும். மேலும் இந்த மரத்தின் கீழ் தான் சிவ பெருமானுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடந்த்து என்பது ஐதீகம்.

சுவாமி பெயர் காரணம்: 

         இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானுக்கு ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயர் . ஏகம் என்றால் ஒரு என்று பொருள் அம்ரம் என்றல் மரம் என்று பொருள் . இந்த இடத்தில் உள்ள மாமரத்தை வேத மரம் என்ற பெயர் உண்டு.

திருமண தடை:

         இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானையும் அம்பாளையும் வழிபாடு செய்து அர்ச்சனை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

குழந்தை பேறு:

             இக்கோவிலில் உள்ள மாமரத்தில் காய்க்கப்படும் பழமோ அல்லது காயோ உண்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

அதிசயத்தின் அடிப்படையில் :

       இந்த கோவிலில் தை மாதம் வரும் ரத சப்தமி அன்று சூரியனின் ஒளி சிவ பெருமான் மீது விழுவது அதிசயமாக உள்ளது. மேலும் இந்த சிவ பெருமானின் மீது பார்வதி தேவியின் கை ரேகை உள்ளது சிறப்பம்சமாக உள்ளது.

Image result for சூரியனின் ஒளி சிவ பெருமான்


வேண்டுதல்கள்:

      திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அபிஷேகம் செய்தும் அன்னதானம் செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

விஷேஷ தினங்கள்:

         இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

             இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டு முதல் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது ஆகும். மேலும் இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக மாமரமும், திருக்குள தீர்த்தமாக சிவகங்கை தீர்த்தமும் உள்ளது.

Image result for காமாட்சி அம்மன் கோவில்


அருகில் உள்ள கோவில்கள்:

            இந்த கோவிலுக்கு அருகில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.