PIRINTHA THAMBATHI SERA VANANGA VENDIYA KOVIL :: MAARI AMMAN

பிரிந்த தம்பதி ஒன்று கூடிய வழிபட வேண்டிய தெய்வம்:
    பிரிந்த தம்பதி ஒன்று கூடிய  வழிபட வேண்டிய மாரி அம்மன்  திருக்கோவில்.

எங்கு உள்ளது:
      இந்த கோவில் அமைந்துள்ள ஊர் நாகபட்டினம் மாவட்டத்தில் ஒழுகை மங்களம் என்ற ஊரில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
    இந்த கோவில் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிளும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

ஸ்தல வரலாறு:
   இந்த கோவிலில் உள்ள அம்மன் சுமார் ஆயிரத்து ஆயிநூறு வருடங்களுக்கு முன் சுயம்புவாக தோன்றியதாக கூறுகின்றனர்.  இந்த கோவில் அமைந்த இடம் முதலில் காடாக இருந்தது  மாடு, ஆடு மேய்க்கும்  இடமாக இருந்தது . ஒரு  நாள் மாடு மேய்க்கும் போது  பசு
தானாக வந்து இந்த இடத்தில் பால் பொழிந்தது,.
   பிறகு மாடு மேய்ப்பவர் இந்த இடத்தில் எதோ இருக்கிறது என்று தெரிந்து  அந்த இடத்திற்கு சென்று பார்த்ததும் அந்த இடத்தில் வந்து பார்த்தவுடன் ஒரு அம்மன் சிலை சுயம்புவாக தோன்றி இருந்தது.

வேண்டுதல்கள்:
     இந்த கோவிலில் பிரிந்த கணவன் மனைவி ஒன்று கூடி, இல்லறம் இனிதே நிலைத்திட, குழந்தை பாக்கியம் பெற்றிட இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர்.

விசேஷ தினங்கள்:
    இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் வரும் ஆடிபெருக்கு, மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது. மேலும் ஆடிபெருக்கு நன்னாளில் இந்த கோவிலில் தீர்த்தவாரி நடைபெறும்.

குழந்தை பேறு:
     இந்த கோவிலில் வேப்ப மரம் உள்ளது, அந்த வேப்ப மரத்தில்  மஞ்சள் நிற சரடினை கட்டினால் குழந்தை பேரு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்கும் என்பது ஐதீகம்.

தீர்த்தகுளம்:
    இந்த கோவிலில் ஒரு தீர்த்த குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் உப்பு மற்றும் சர்க்கரை கொட்டி வழிபட்டால் கட்டி போன்றவையும் சர்க்கரையை கரைப்பதால் பல மன துன்பங்களும் தீரும் என்பது ஐதீகம்.

வேண்டுதல் :
   இந்த கோவிலில் உள்ள வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் இங்குள்ள சுயம்புவாக உள்ள அம்மனுக்கு புடவை அணிவித்து, பொங்கல் செய்து நெய்வேத்தியம் செய்தும் தங்களது குறைகளை போக்கி கொள்கின்றனர்.
    மேலும் இந்த அம்மனுக்கு ஆடி மாதத்தில் அபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்தும் விளக்கு ஏற்றி கொண்டும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கோவில் அமைப்பு:
    இந்த திருகோவிலில் சீதளா பரமேஸ்வரி அம்மனும் , காத்தவராயனும், குழந்தைகளுக்கு மிகவும் உகந்த பேச்சியம்மனும் , கறுப்பர் ஆகியோர் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிகிரார்கள்.

திருவிழாக்கள்:
    இந்த கோவிலில் பங்குனி மாதம் நடக்கும் திருவிழா, சித்திரை வருடபிறப்பு, நவராத்திரி , தை மாத பிறப்பு திருவிழாவாக கொண்டாடபடுகிறது.




NEW KADAN THOLLAI THEERKKUM KOVIL :: KADUMPAADI AMMAN KOVIL

கடன் தொல்லை நீங்க கடும்பாடி சின்னம்மன் கோவில்:
          கடன் தொல்லையில் இருந்து மிகவும் அவதி படுவார்கள் சென்னை சைதாபேட்டையில் உள்ள கடும்பாடி அம்மனை வழிபாட்டால் கடன் தொல்லையில் இருந்து விலகலாம்.

எங்கு உள்ளது:
         இந்த ஊர் சென்னையில் சைதாபேட்டையில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
         இந்த திருக்கோவில் காலை ஒன்பது மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

கோவில் சிறப்பு:
       இந்த கோவில் கடன் தொல்லை  நீங்க மற்றும் திருமண தடை நீங்க மற்றும் திருமண வாழ்கை இனிது நடக்க இந்த கோவிலில் வந்து வழிபடுகின்றனர்.

ஸ்தல வரலாறு:
        இந்த கோவிலில் உள்ள அம்மன் சுயம்பு வடிவமாக உள்ளது. இந்த கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

பக்தர்களின் தெய்வம்:
     இந்த கோவில் தான் பக்தர்களுக்கு மிகவும்
பிடித்த தெய்வம் என்று கூறலாம். இந்த கோவில் தான் அங்குள்ள மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது.

புற்று உள்ள அம்மன்:
    இந்த கோவிலில் சின்னம்மனுக்கு அடுத்து மிகவும் சிறப்பு வாய்ந்தது இங்கு உள்ள புற்று. இந்த சின்னம்மனை வழிபாட்டு விட்டு பக்தர்கள் அனைவரும் புற்றிக்கு பால் அல்லது முட்டை  வைக்கின்றனர். அப்படி செய்தால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருமணம் நடக்க:
    இந்த கோவிலில் ஒரு வேப்ப மரம்  உள்ளது. இங்குள்ள வேப்ப மரத்தினை வெள்ளி கிழமை வழிபாடு மஞ்சள் சரடு வாங்கி கட்டினால், திருமணம் விரைவில் நடக்கும்.

கடன் தொல்லை:
      இந்த கோவிலில் வெள்ளி கிழமை பத்து முப்பது முதல் பண்ணிறேடு மணி வரை உள்ள ராகு காலத்தில்  அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தி விளக்கு ஏற்றி மனதார வணங்கினால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது உறுதி.

வேண்டுதல்கள்:
    இந்த கோவிலில் மக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கையை நிறைவேறிய பின்பு பொங்கல் இட்டும், அபிஷேகம் செய்து, புடவை வாங்கி கொடுத்தும் , மஞ்சள் சரடு கட்டியும் தனது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

கோவில் அமைப்பு:
    இந்த கோவிலில் விநாயகர், சப்த மாதாக்கள் ஆகியோர் காட்சி தருகின்றனர்.


  


VAADHA NOY THEERA VANANGA VENDIYA KOVIL :: ARASUKAATHTHA AMMAN KOVIL

வாத நோயினை தீர்க்கும் அரசுகாத்த அம்மன் கோவில்:
       அரசுகாத்த அம்மன் திருக்கோவில் வாதம் மற்றும் தோல் நோயினை முற்றிலுமாக குணபடுத்தும் திறமை கொண்டவளாக திகழ்கிறாள்.

எங்கு உள்ளது:
    இந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திருக்கு அருகில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
     இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

கோவில் சிறப்பு:
      இந்த கோவிலில் வாத நோய் மற்றும் வாய் பேச பேச இயலாதவர்கள் வந்து மிகவும் வணங்கி செல்கின்றனர். மேலும் தோல் நோய் தீரவும் இந்த கோவிலில் வந்து வணங்குகின்றனர்.

ஸ்தல வரலாறு:
     பார்வதி தேவி சிவ பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார் . அப்போது பார்வதி அம்மனுக்கு காவல் காப்பதற்காக சில அம்மன் தெய்வங்கள்  .இருந்தன. அவர்கள் அரசுகாத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகியோர். அந்த காவல் தெய்வத்தின் தலைவி அரசுகாத்த அம்மன்.

அரசுகாத்த அம்மன்  பெயர்காரணம்:
     அரசுகாத்த அம்மன் சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்த அம்மன். சோழ மன்னர்கள் இந்த அம்மனின்  மீது அதீத பற்றில் இருந்தனர்.
இந்த  சோழர்களின் ஆட்சியினை காப்ற்றியதால் இந்த அம்மனுக்கு அரசினை காத்த  அம்மன்  என்ற பெயர் பெற்றது.

அம்மனின் தோற்றம்:
      இந்த அம்மன் வட திசையை பார்த்தபடி காட்சி  தருகிறாள்.மேலும் இந்த அம்மனுக்கு இரண்டு கூரை பற்களும், நான்கு திருக்கையில் வலது கையில் உடுக்கை மற்றும் கீழே உள்ள கையில் சூலம்,இடது மேல் உள்ள கையில் பாசம் , கீழே உள்ள கையில் கபாலம் ஆகியவை உள்ளது.
      மேலும் ஜ்வாலா கீர்டம் என்னும் கிரீடம் அணிந்து  தன்னை  நாடி வரும் பக்தருக்கு காட்சி தருகிறாள்.
        ஆறடி உயரத்தில் இந்த அம்பிகை காட்சி தந்து
இடது காலினால் அரக்கனை வாதம் செய்த காட்சியில்  உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

தனி சிறப்பு:
     எல்லா அம்மனின் வாகனமாக சிம்ம வாகனம் இருக்கும் , ஆனால் இந்த அம்மனின் வாகனம் யானை வாகனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு:
     இந்த கோவிலில் சம்பாத்த  விநாயகர்,வள்ளி தேவானையுடன் உள்ள முருகர், ஐயப்பன் ஆகியோர்  அருள்பாளிகின்றனர்.

அரசுக்காத்த அம்மனின் பெயர்:
      இந்த அம்பாளுக்கு சம்பத்கரீச்வரி என்ற திருநாமமும் உள்ளது. சம்பத் என்ற பெயருக்கு செல்வம் என்று  பொருள்.கரி என்ற சொல்லுக்கு யானை என்பது பொருள். யானை மீது உலா வந்து
செல்வத்தை அள்ளி கொடுப்பதால் இந்த அம்மனுக்கு சம்பத்கரீச்வரி என்ற பெயர் ஏற்பட்டது.

விசேஷ தினங்கள்:
      இந்த கோவிலில் பவுர்ணமி மற்றும் எல்லா வெள்ளி கிழமையும் பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் வைகாசி மற்றும் ஆடி கடைசி வெள்ளி கிழமையில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

வேண்டுதல்கள்:
    இங்குள்ள அம்மனிடம் தோல் நோய் மற்றும், வாதத்திற்கு வேண்டி கொண்டு அது பூரணமாக குணம் பெற்றவுடன் பக்தர்கள் வந்து வெள்ளி கிழமையில்   அபிஷேகம் மற்றும் நெய் விலகு ஏற்றியும் அர்ச்சனை செய்தும்  அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.




PILLAI VARAM THARUM THALUKKANATHTHAMMAN KOVIL :: KODAMBAKKAM

பிள்ளை வரம் தரும் தலுக்கானத்தம்மன்:
      இந்த ஆதி தலுக்கனத்தம்மன் பிள்ளை வரம் அருளும் அம்மனின் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

எங்கு உள்ளது:
    இந்த கோவில் சென்னையில் உள்ள  கோடம்பாக்கம் என்ற ஊரில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
     இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

கோவில் பெருமை:
    இந்த அம்மனின் தலை  ஆற்றில் இருந்து எடுத்ததாக கூறுகின்றனர்.

பிள்ளை வரம்:
    இந்த  கோவிலில் அதிகமாக பிள்ளை வரம் மற்றும்  மாங்கல்ய பாக்கியம்  அதிகமாக இந்த கோவிலில் வந்து வணங்குகின்றனர்.

ஸ்தல வரலாறு:
    முன்னொரு காலத்தில் முஸ்லீம் என்ற மதத்தை சார்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு குழந்தை இருந்தது. அந்த குழந்தை பார்வை அற்றதாக இருந்தது. பல கோவில்களில் வேண்டியும் பார்வை தெரியவில்லை . உடனே இந்த அம்மனை வணகியவுடன் பார்வை அந்த குழந்தைக்கு கிடைத்தது.
      அந்த குழந்தைக்கு பார்வை கிடைத்தவுடன் அந்த அம்மனின் பெயர்   தலுக்கனத்தம்மன் என்ற பெயர் பெற்றதாக வரலாறு  கூறுகிறது.

தலை கண்டெடுப்பு:
      சென்னை நுங்கம்பாக்கம் என்ற பகுதியில் சுமார் நூறு வருடத்திருக்கு முன்  ஆறு ஒன்று இருந்தது. அந்த ஆற்றில் இருந்து  ஒருவர் குளித்து கொண்டிருக்கும் போது ஒரு தலை மிதந்து வருவது போல தோன்றியது. பிறகு அங்கு சென்று பார்த்தவுடன் அம்மனின் தலை மிதந்து வந்ததாக கூறுகின்றனர்.

கோவில் உருவான விதம்:
    முதலில் இந்த கோவிலை அண்ணாசாமி என்ற ஒருவர்  கட்டினார்.அவரும் வசதி அற்ற ஏழை என்பதால் பனை ஓலை வைத்து கட்டியதாக பக்தர்கள் கூருகின்றர்னர். பிறகு அந்த அம்பாளின் சக்தியினை அறிந்த மக்கள் அனைவரும் இந்த கோவிலில் வந்து அம்மனை  வணங்கி   அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அம்மனின் சக்தியினை புரிந்து கொண்டு பக்தர்கள் பிற்காலத்தில் கோவில் கட்டினர்.

கோவிலின் மற்ற பெருமைகள்:
      இந்த கோவிலில் உள்ள அம்மன் மிகவும் கோபத்துடன் கானபடுவாள். ஏனெனில் இந்த  அம்மனுக்கு தலை மட்டும் உள்ளதால் இந்த அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும்.
       அம்மனின் உக்கிரகம் அதிகமானதால் இந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த அம்மனுக்கு முழு உருவத்தை கொடுத்தனர்.

கோவில் அமைப்பு:
            இந்த கோவிலில் விநாயகர், ஐயப்பன், சப்த மாதாக்கள் மற்றும் பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

சிறப்பு நாட்கள்:
    இந்த கோவிலில் ஆடி மூன்றாம்  வெள்ளி,மற்றும் தை மாதம் மூன்றாம் வெள்ளி ஆகியவை மிக சிறப்பாக ,கொண்டாடபடுகிறது.
    மேலும் இந்த கோவிலில்  சங்கடஹரசதுர்த்தி, பைரவ பூஜைஐயப்ப பஜனை ஆகியவை மிக சிறப்பாக நடைபெறுகிறது.

கூழ் வார்த்தல்:
        இந்த கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி மிக சிறப்பாகும். அப்போது அம்மனுக்கு அன்னதானம் செய்வர் அந்த அன்ன தானத்தை சாப்பிட குழந்தை பாக்கியம் பெருவதோடு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



IDARKALAI KALAIYUM KOVIL :: NAGARKOVIL

இடர்களை களையும் கோவில்:
      இந்த  கோவிலில் உள்ள  இறைவனை வழிபட்டால் அத்தனை இடர்களும் போகும் என்பது போகும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் அமைந்துள்ளது.

எங்கு உள்ளது:
     இந்த திருக்கோவில் நாகர்கோவில்  மாவட்டத்தில் அண்ணா பேருந்து நிலையத்தில்  இருந்து மிக பக்கத்தில் அமைந்து உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
       இந்த கோவில் காலை ஐந்து முப்பது மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும்  முப்பது மணி முதல் இரவு ஏழு முப்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.

அம்பாள் மற்றும் பெருமாள்:
    இந்த கோவிலில் பெருமாள் இடர்களை களையும் பெருமாள் என்றும் அம்பாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் காணப்படுகிறார்கள்.

கோவில் அமைப்பு:
   இந்த திருத்தலம் இடர்களை களையும் தலமாக உள்ளது.  இந்த தலத்தில் உள்ள இறைவன் கிழக்கு பார்த்து காட்சி தருகிறார். மேலும் இந்த பெருமாளை தரிசனம் செய்வது மிகுந்த பலனை தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
     இந்த கோவிலில் எல்லா பெருமாள் கோவிலுக்கு உள்ள இயல்பான  சனி கிழமை வெகு சிறப்பாக கொண்டாடபடுகிறது.
    இங்கு வரும் பக்தர்களுக்கு
துளசி தீர்த்தமும் துளசியும்  தருகின்றனர்.பெருமாள் சன்னதி முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்பாள் வீற்ற்றிருக்கிறாள். மேலும் இந்த கோவிலில் முருகன், சிவன், அனுமார் ஆகியோர் உள்ளனர்.
     மேலும் நவாக்ரிஹ சன்னதியும் அமைய பெற்ற திருக்கோவில் ஆகும்.

 

VAAZHVIL MUNNERA KASAVANAM PATTI SITHTHAR KOVIL :: KASAVANAMPATTI

வாழ்வில் முன்னேற்றம் தரும் கசவனம்பட்டி சித்தர் கோவில்:
       வாழ்வை முன்னேற்ற மிகுந்த  கோவிலாக திகழ்கிறது கசவனம்பட்டி திருக்கோவில்.

எங்கு உள்ளது:
       சென்னை இருந்தும் போகலாம். அல்லது திண்டுக்கல் தான் இதற்க்கு முக்கியமான ஊர் . திருண்டுக்களில் இருந்து நிறைய சிறப்பு பேருந்துகள் உள்ளது. திண்டுக்கல் பக்கத்தில்  இருக்கும் கன்னிவாடி என்ற ஊரில் கசவம்பட்டிக்கு பேருந்துகள் உள்ளது.

கசவனம் பட்டி சித்தர்:
     கசவனம் பட்டி சித்தர் தனது மெய் மறந்து ஆடையினை உடுத்தாமல், உணவு கூட அருந்தாமல், மிகவும் தவம் இருந்து இந்த பூவுலகில் வாழும் பக்தருக்கு தொண்டு செய்வதே குறியாக  கொண்டிருந்தார்.
        அப்படி இருந்த சித்தர் காடினிலோமலையிநிலோ, அருவியிலோ இல்லாமல் இந்த ஊரில் வந்து தவம் இருந்து  இங்கேயே மவுனம் காத்து ஜீவசமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகான்கள் சிறப்பு:
     இந்த ஊரில் மட்டும் அல்லது பல ஊர்களில் இருந்தும் பல முனிவர்கள் சாமியார்கள் இந்த சித்தரை கண்டு ஆசிர்வாதம் பெற்று  சென்றனர்.

 சித்தரின் வரலாறு:
     சுமார் எண்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் கிழக்கு புறத்தில் குட்டத்து ஆவாரம்பட்டி என்ற ஊர் இருந்தது இந்த ஊர் மிகுந்த காடாக இருந்தது.
   
     இந்த சித்தர் பிறந்த வருடம் யாருக்கும் தெரியாது . தனது பன்னிரண்டு வயதில்  தான் உடுத்தி இருந்த உடைகளை களைந்து சாமியாராக உலா  வந்தார். அவருக்கு அந்த காட்டில் ஆடு, மாடுகளை மேய்பவர்கள் எவருக்கு ஆகாரம் கொடுத்து  உதவினர். பல ஊர்களுக்கு சென்றார். ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த ஊருக்கு வர செய்தனர் .

சித்தரின் அருள்வாக்கு:
    இந்த சித்தர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார் .  வயதிலேய அவருக்கு ஆடைகள் என்றால் பிடிக்காது. ஆதால் மக்கள் அனைவரும் எவரை அப்போதில் இருந்தே சித்த ரூபமாக பாவித்தர்னர்.
    தன்னை நாடி வரும் பக்தரிடம் அதிகமாக பேச மாட்டார். ஆனால்   என்ன நடக்கும் என்று முன்னரே கூறி விடும் தன்மையை பெற்று இருந்தார் .

நோய் தீர்க்கும் வல்லவர்:
     இந்த சித்தர் நோய் தீர்க்கும் வல்லவராக பக்தருக்கு  அருள்பாலித்தார்.இன்றலவ்கும் பல பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் சித்தர்:
     பகலில் இந்த சித்தர் ஊரில் உள்ள நான்கு திசைகளிலும்  இருப்பார். முக்கியமாக சிவா சக்தி கோவில், மாலா  கோவில்,
   பூங்காநியம்மன் கோவில் அருகில் இருப்பார் என்பது மக்களின் ஐதீகமாக உள்ளது.
   இந்த ஊரில் அனைவரின் வீட்டிலும் விளையாடி மகிழ்டவர் என்ற பெருமை எவருக்கு உண்டு.

சித்தரின் மறைவு:
     இப்படி பல விதமான அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர் ஐப்பசி மாதம் ஆறாம் தேதி ஜீவா சமாதி அடைந்தார். 23.10.1982 . அன்று சனி கிழமை . அவரை ஜீவ சமாதி அமைக்கும் நேரத்தில் கனமழிஅயாக முப்பது முக்கோடி தேவர்களும்  வந்து ஆசிவாதம் செய்தனர். பிறகு கருடன் அங்கே சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அங்கேயே மக்கள் அவருக்கு கோவில் ஒன்று அமைத்தனர்.




SEYVINAI VETTUM VETTUTADI KAALI :: SEYVINAI KAALAYAAR KOVIL

செய்வினையை வெட்டி எரியும் வெட்டுடையார் காளி அம்மன்:
    செய்வினை மற்றும் ஏதேனும் தீய சக்திகளின் ஆக்கிரமிப்பை வேரோடு வெட்டி எரியும் யும் வல்லமை படைத்த தெய்வம் தான் வெட்டுடையார் கோவில்

எங்கு உள்ளது:
        இந்த திருக்ககோவில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காளையார் கோவில் செல்லும் பாதையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காளையார் கோவில் செல்லும் பாதையில் வரும் பேருந்தில் ஏறி  முக்கிய சாலையில் இறங்கி கொள்ளலாம்.

ஸ்தல வரலாறு:
      இந்த காளையார்கோவிலில் வாழ்ந்த ஒரு பக்தர் ஒருவரின் கனவில் இந்த அயனார் தோன்றி ஈச்ச மரம் அதிகம் இருக்கும் காட்டில் தான் இருப்பதாக கூறினார். அயனார் சொன்ன ஈச்ச மரம் இந்த கோவில் காளையார் கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது. உடனே அந்த பக்தர் அங்கு சென்று   பார்த்தார். எங்கும் சிலை இல்லை.
    பிறகு ஒரு இடத்தில் தோண்டினார் . அந்த இடத்தில் கோடாரியால் தாக்கியது போன்ற ஒரு சிலை இருந்தது.
    ஆதாலால் இந்த அயனாருக்கு வெட்டு கொண்ட அயனார் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.
     பிறகு ஒரு நாள் இந்த அயனார்   சந்நிதானத்திருக்கு பக்கத்தில் இரவில் ஒரு பெரும் ஒளியினை பார்த்தனர் பக்தர்கள்.   அதனை அப்போது காணாமல் மறுநாள் காலை வந்து பார்த்தபோது அம்மனின் யந்திரம் ஒன்று  கிடைத்தது.அந்த இடத்தில் தான் அம்மனுக்கு ஒரு சிலை செய்து நிறுவினர்.
         இந்த கோவிலை உருவாக்கியவர் யார் என்று இன்று  முதல்  தெரியவில்லை. ஆனால்  அய்யனார்  கோவிலை தன வசம் வைத்து கொண்ட ஒரு குடும்பம் மட்டும்
இந்த ஊரில் இருந்தது. அவர்களின் இரண்டு ஆண் வாரிசுகள் மட்டும் இந்த கோவிலை பூஜை செய்து வந்தனர்.
       முதல் மகன் பெயர் காரிவேளார்.  இரண்டாம் மகன் பெயர் கருப்ப வேளார் . இருவருக்கும் சண்டை வந்தது. முதல் மகனான காரிவேளார் சண்டை போட்டு கேரளா சென்று பல மாண்டிர்றேகனகளை கற்று தனது சொந்த ஊருக்கு  திரும்பினார்.பிறகு அந்த ஊருக்கு வந்து தான் கற்ற மாந்த்ரீகங்களை வைத்து சில .
 தேவதைகளை உருவாக்கினார்.
    அய்யனாரின் முன் மணல் மீது சில எழுத்துக்கள் போரிக்கப்படிறுப்பதை கண்டார்,. அவை அனைத்தும்  காலி தேவியின் அம்சம் என்று அறிந்து அந்த இடத்தில் காளி தேவியை உருவாக்கினார். காரிவேளார் உருவாகியதே வெட்டுடை காளி அம்மன்.
வேண்டுதல்கள்:
    வெள்ளி மற்றும் செவ்வாய் தினங்களில்  காளிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். ஏமாற்றுதல் , பொய் சொல்லுதல், ,பில்லி, சூனியம் ஆகிய அணைத்திருக்கும் இந்த கோவிலில் வந்து வேண்டி கொள்கின்றனர் பக்தர்கள்.






SARVA SELVANGALUM THARUM ERUMBEESWARAR :: THIRUVERUMBOOR

சர்வ சகலமும் தரும் ஏறும்பீஸ்வரர் திருக்கோவில்  
    இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பெரும் என்பது ஐதீகம்.

எங்கு உள்ளது:
     இந்த ஏறும்பீஸ்வரர் திருக்கோவில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரோடில் சுமார் பதினோரு கிலோ மீட்டர் தொலைவில் திருவெறும்பூர் என்ற ஓர் ஊர் உள்ளது.
அங்கு தான் இந்த கோவில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
      இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

அம்பாள் மற்றும் ஈசன்:
     இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் ஏறும்பீஸ்வரர் என்றும் அம்பாள் நறுங்குழல் நாயகி என்றும் சிறப்பு பெயர் கொண்டு விளங்குகிறார்கள்.

ஸ்தல புராணம்:
    முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்ற அசுரன் தேவர்களை கடும் தும்பத்திருக்கு ஆளாகினான். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாரத பெருமானிடம் எதாவது வழி கூறுமாறு கூறினார். நாரத பெருமானோ திருச்சி அருகில் இருக்கும் ஏறும்பீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுமாறு கூறினார்.
      தேவர்களும் நாரதரின் சொல்லை கேட்டு இந்த திருகோவிலுக்குக்கு வந்து வணங்கினார்கள் .
     தேவர்கள் அரக்கனின் பார்வையில் இருந்து  தப்பிப்பதற்கு எறும்பு வடிவில் வந்து இங்குள்ள 
இறைவனை வேண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
       சிவ பெருமான் லிங்க தோற்றம் பெற்றிருப்பதால் அவரின் தோல் மிகவும் மென்மையாக இருந்ததால் தேவர்கள் சிவ பெருமானின் மீது ஏறி வணங்க மிகவும் தடுமாறினார். 
        ஆனால் இறைவனோ அதனை கண்டு மனம் உருகி
தனது லிங்க தோற்றத்தை எறும்பு புற்றாக அமைத்து கொண்டார். பிறகு எறும்புகள் அனைத்தும் மேல் ஏறி பூஜை செய்தது.  தேவர்கள் அனைவரும் எறும்பாக மாறி இந்த தளத்தில் உள்ள தலத்தில் உள்ள இறைவனை வணங்கியதால் இந்த  தலத்திருக்கு  எறும்பியூர் என்ற சிறப்பு பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு:
    இந்த கோவில் ஒரு குகையின் மேல் அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு. மேலும் இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானை வழிபட சுமார் நூற்று இருபத்தி ஐந்து படிகள் கடந்தேறி தான் வழிபட வேண்டும் . இந்த கோவில் வடக்கு நோக்கி உள்ளது. இரண்டு  பிராகாரங்கள் கொண்டுள்ளது இந்த திருக்கோவில் .

லிங்க அமைப்பு:
    இந்த கோவிலில் உள்ள லிங்கம்  பபுற்று வடிவில் இருப்பதால் இந்த லிங்கத்தை மிகவும் பாதுகாப்பாக காத்து வருகின்றனர்.  லிங்கத்தின் அமைப்பு சற்று வளைந்தும் மேல் மிகவும் மண் போன்று மேன்மை அல்லாமலும் உள்ளது.

பிரகாரத்தில் உள்ள கடவுள்கள்:
     பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர்  உள்ளனர்.மேலும் சங்கர நாராயணர் சிலை, விஷ்ணு துர்கை ஆகியோர் இந்த திருகோவிலில் காட்சி தருகின்றனர்.
       மேலும்  பிரம்மாஇந்திரன்,அக்னி தேவன், முருகர், அகத்திய  முனிவர்,நைமிச  முனிவர் ஆகியோர் இந்த தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஸ்தல விருக்ஷம்:
     இந்த திருகோவிலில் விருக்ஷமாக சிவனுக்கு உரித்தான வில்வ மரமும், புனித தீர்த்தமான பிரம்மா தீர்த்தமும் உள்ளது .

கோவில் வேண்டுதல்கள்:
    இந்த திருகோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமானை வழிபட்டால் சக சௌபாக்கியங்களும் கிட்டும்.