PILLAI VARAM THARUM THALUKKANATHTHAMMAN KOVIL :: KODAMBAKKAM

பிள்ளை வரம் தரும் தலுக்கானத்தம்மன்:
      இந்த ஆதி தலுக்கனத்தம்மன் பிள்ளை வரம் அருளும் அம்மனின் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

எங்கு உள்ளது:
    இந்த கோவில் சென்னையில் உள்ள  கோடம்பாக்கம் என்ற ஊரில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
     இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

கோவில் பெருமை:
    இந்த அம்மனின் தலை  ஆற்றில் இருந்து எடுத்ததாக கூறுகின்றனர்.

பிள்ளை வரம்:
    இந்த  கோவிலில் அதிகமாக பிள்ளை வரம் மற்றும்  மாங்கல்ய பாக்கியம்  அதிகமாக இந்த கோவிலில் வந்து வணங்குகின்றனர்.

ஸ்தல வரலாறு:
    முன்னொரு காலத்தில் முஸ்லீம் என்ற மதத்தை சார்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரு குழந்தை இருந்தது. அந்த குழந்தை பார்வை அற்றதாக இருந்தது. பல கோவில்களில் வேண்டியும் பார்வை தெரியவில்லை . உடனே இந்த அம்மனை வணகியவுடன் பார்வை அந்த குழந்தைக்கு கிடைத்தது.
      அந்த குழந்தைக்கு பார்வை கிடைத்தவுடன் அந்த அம்மனின் பெயர்   தலுக்கனத்தம்மன் என்ற பெயர் பெற்றதாக வரலாறு  கூறுகிறது.

தலை கண்டெடுப்பு:
      சென்னை நுங்கம்பாக்கம் என்ற பகுதியில் சுமார் நூறு வருடத்திருக்கு முன்  ஆறு ஒன்று இருந்தது. அந்த ஆற்றில் இருந்து  ஒருவர் குளித்து கொண்டிருக்கும் போது ஒரு தலை மிதந்து வருவது போல தோன்றியது. பிறகு அங்கு சென்று பார்த்தவுடன் அம்மனின் தலை மிதந்து வந்ததாக கூறுகின்றனர்.

கோவில் உருவான விதம்:
    முதலில் இந்த கோவிலை அண்ணாசாமி என்ற ஒருவர்  கட்டினார்.அவரும் வசதி அற்ற ஏழை என்பதால் பனை ஓலை வைத்து கட்டியதாக பக்தர்கள் கூருகின்றர்னர். பிறகு அந்த அம்பாளின் சக்தியினை அறிந்த மக்கள் அனைவரும் இந்த கோவிலில் வந்து அம்மனை  வணங்கி   அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய அம்மனின் சக்தியினை புரிந்து கொண்டு பக்தர்கள் பிற்காலத்தில் கோவில் கட்டினர்.

கோவிலின் மற்ற பெருமைகள்:
      இந்த கோவிலில் உள்ள அம்மன் மிகவும் கோபத்துடன் கானபடுவாள். ஏனெனில் இந்த  அம்மனுக்கு தலை மட்டும் உள்ளதால் இந்த அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும்.
       அம்மனின் உக்கிரகம் அதிகமானதால் இந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த அம்மனுக்கு முழு உருவத்தை கொடுத்தனர்.

கோவில் அமைப்பு:
            இந்த கோவிலில் விநாயகர், ஐயப்பன், சப்த மாதாக்கள் மற்றும் பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

சிறப்பு நாட்கள்:
    இந்த கோவிலில் ஆடி மூன்றாம்  வெள்ளி,மற்றும் தை மாதம் மூன்றாம் வெள்ளி ஆகியவை மிக சிறப்பாக ,கொண்டாடபடுகிறது.
    மேலும் இந்த கோவிலில்  சங்கடஹரசதுர்த்தி, பைரவ பூஜைஐயப்ப பஜனை ஆகியவை மிக சிறப்பாக நடைபெறுகிறது.

கூழ் வார்த்தல்:
        இந்த கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி மிக சிறப்பாகும். அப்போது அம்மனுக்கு அன்னதானம் செய்வர் அந்த அன்ன தானத்தை சாப்பிட குழந்தை பாக்கியம் பெருவதோடு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



No comments:

Post a Comment