THIRUMANA VARAM THARUM VYASARPADI RAVEESWARAR THIRUKOVIL

திருமணம் விரைவில் கைகூடவும் குழந்தைகள் சிறப்பாக புத்திகூர்மையாக வளரவும் வழிபட வேண்டிய தெய்வம் ரவீஸ்வரர் திருக்கோவில் :
        இந்த திருக்கோவில் திருமணம் விரைவில் நடக்கவும் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகள் மிகவும் புத்தி கூர்மையுடன் இருக்கவும் வாங்க வேண்டிய தெய்வமாக உள்ளது  வியாசர் பாடியில் உள்ள ரவீஸ்வர் திருக்கோவில்.

எங்கு உள்ளது :

     இந்த திருக்கோவில் சென்னையில் உள்ள வியாசர்பாடி என்ற இடத்தில் ரவீஸ்வரர் ஆலயம் உள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் பெயர்:

       இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் ரவீஸ்வரர் என்றும் அம்பாள் மரகதாம்பாள் என்ற சிறப்பு பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறார்கள்.

நடை திறந்திருக்கும் நேரம்:

     இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரெண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஸ்தல வரலாறு:

       ஸமுங்யா தேவி என்பவர் சூரிய பகவானின் மனைவி ஆவாள். அவர் ஒரு முறை தனது நிழலினை உருவாக்கி வீட்டில் வைத்து விட்டு சூரியனை பிரிந்து சென்று விட்டார். ஏனெனில் அவருடைய வெப்பத்தை அவரால் தாங்க முடியாத காரணத்தினால் இதனை செய்தார். அந்த நிழல் போன்ற அமைப்பு சூரியனின் குழந்தைகளை வாட்டி வதைத்து மிகவும் துன்புருத்தியது.

        இதனை கண்ட சூரிய பகவான் தனது மனைவி தன்னை விட்டு சென்று விட்டால் என்பதை அறிந்த பின் மிகவும் கோபமுண்டு எழுந்தார். தனது மனைவியை தேடி கொண்டு சென்றார். அப்போது போகின்ற வழியில் வழியில் இருந்த பிரம்மாவை அவர் கவனிக்க வில்லை. பிறகு பிரம்மா சூரியன் தன்னை மதிக்கவில்லை என்று நினைத்து பிறகு சூரியனுக்கு பூலோகத்தில் மனிதனாக பிறக்க வேண்டும் என்று சாபம் இட்டார்.

        இதனை கண்டு மிகவும் வருத்தம் அடைந்த சூரிய பகவான் நாரதரிடம் ஆலோசை தரும்படி கேட்டார். நாரதர் அதற்க்கு இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு சிவ லிங்கத்தினை உருவாக்கி அதை பூஜித்து வணங்க வேண்டும் என்று கூறினார் . அப்படி செய்தால் சாப விமாரோசனம் அடையலாம் என்று கூறினார்.

கோவில் சிறப்பு:

       இந்த திருக்கோவிலில் திருமணம் விரைவில் நடக்கவும் குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்கவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
ஸ்தல வரலாறு:

       ஸமுங்யா தேவி என்பவர் சூரிய பகவானின் மனைவி ஆவாள். அவர் ஒரு முறை தனது நிழலினை உருவாக்கி வீட்டில் வைத்து விட்டு சூரியனை பிரிந்து சென்று விட்டார். ஏனெனில் அவருடைய வெப்பத்தை அவரால் தாங்க முடியாத காரணத்தினால் இதனை செய்தார். அந்த நிழல் போன்ற அமைப்பு சூரியனின் குழந்தைகளை வாட்டி வதைத்து மிகவும் துன்புருத்தியது.

        இதனை கண்ட சூரிய பகவான் தனது மனைவி தன்னை விட்டு சென்று விட்டால் என்பதை அறிந்த பின் மிகவும் கோபமுண்டு எழுந்தார். தனது மனைவியை தேடி கொண்டு சென்றார். அப்போது போகின்ற வழியில் வழியில் இருந்த பிரம்மாவை அவர் கவனிக்க வில்லை. பிறகு பிரம்மா சூரியன் தன்னை மதிக்கவில்லை என்று நினைத்து பிறகு சூரியனுக்கு பூலோகத்தில் மனிதனாக பிறக்க வேண்டும் என்று சாபம் இட்டார்.

        இதனை கண்டு மிகவும் வருத்தம் அடைந்த சூரிய பகவான் நாரதரிடம் ஆலோசை தரும்படி கேட்டார். நாரதர் அதற்க்கு இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு சிவ லிங்கத்தினை உருவாக்கி அதை பூஜித்து வணங்க வேண்டும் என்று கூறினார் . அப்படி செய்தால் சாப விமாரோசனம் அடையலாம் என்று கூறினார்.

     அவ்வாறே சூரிய பகவான் சிவ பெருமான் ஒன்றை வடிவமைத்து அதற்க்கு பூஜை செய்து வணங்கினார். அந்த சிவ லிங்கத்தின் மேல் சிவ பெருமான் தோன்றி சூரிய பகவானுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்க்கு சிவ பெருமான் நான் பூஜித்த இந்த லிங்கத்தின் மீது தாங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார். சிவ பெருமானும் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த லிங்கத்தின் மேல் வந்தார்.

அம்பிகை  வரலாறு:

       முன் காலத்தில் இந்த ஊரினை ஆட்சி செய்த வீச்வரன் என்ற அரசர் வாழ்ந்து வந்தார். அவர்க்கு திருமணம் ஆகி பிள்ளைப்பேறு இல்லை. பிறகு அந்த அரசர் இந்த சிவ பெருமானை வணங்கி மிகவும் வேண்டி வந்தார். பிறகு அதனை கண்ட சிவ பெருமான் தனது அம்பிகையை அந்த அரசருக்கு மகளாக பிறக்குமாறு கூறி மறைந்தார்பிறகு அரண்மனை தோட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு குட்டி பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அதனை கண்ட அரசர் அந்த குழந்தையை எடுத்து அந்த குழந்தைக்கு மரகதம் என்ற பெயர் சூட்டி வளர்த்தார் .

         பிறகு அந்த குழந்தை திருமண வயதை எட்டியவுடன் அந்த பெண்ணிற்கு திருமணம் முடிக்க வேண்டும் என் எண்ணிய அரசர் திருமணத்திற்கு வரன் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது சிவ பெருமான் அரசர் கனவில் தோன்றி தாம் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறினார். அந்த கனவினை கண்ட அரசர் மறுநாள் காலை கோவிலுக்கு தனது பெண்ணை அழைத்து சென்றார். அப்போது சிவ பெருமான் அந்த பெண்ணை தன்னுள் சேர்த்து கொண்டார்

        அதற்க்கு பிறகே அந்த கோவிலில் அம்பாள் சன்னதி ஒன்று வந்ததாக 
வரலாறு கூறுகிறது.

ஊர் பெயர் காரணம் :

    புராணங்கள் பதினெட்டு மற்றும் நான்கு வேதங்களை இயற்றிய வ்யாஸர் என்பவர் இந்த சிவ பெருமானை பூஜை செய்ததால் இந்த ஊருக்கு வியாசர்பாடி என்ற பெயர் கொண்டு விளங்குகுகிறது.

வியாசர் சன்னதி:

       இந்த கோவிலில் வ்யாஸர் சிவ பெருமானின் பின் புறம் உள்ள முதல் சன்னதியில் உள்ளார். அவர் கையில் முத்திரை கொண்டு புலியின் தோல் மீது அமர்ந்தவாறு வ்யாஸர் உள்ளார்.

     இந்த வ்யாஸர் முனை காத்த  பெருமால் என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.

கோவிலின் சிறப்பு :

      சிவன் கோவிலில் இங்கு சிவ சன்னதிக்கு அருகில் வாசல் கிடையாது. தெற்கு கோபுர வாசலில் வந்து தான் சிவ பெருமானை தரிசிக்க வேண்டும். மேலும் ஒரு சிறப்பாக சிவ பெருமானின் சன்னதியில் அவருக்கு முன் ஒரு சிறிய துளை ஒன்று உள்ளது. அதன் வழியாக நந்தி  உள்ளது . அந்த துளை வழியாக சூரிய கதிர்கள் சிவ பெருமான் மீது விழும்.

கோவில் அமைப்பு:

       இந்த கோவிலில் விநாயகர், முருகர், பைரவர், சூரியர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகிறார். விநாயகரின் பெயர் சுந்தர விநாயகர். மேலும் இந்த கோவிலில் பிராகாரத்தில் அய்யப்பன் , முருகர் கூடிய வள்ளி தெய்வானை ஆகியோர் உள்ளனர். மேலும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது

  மகிஷன் வதம் நிகழ்ச்சி:

       இங்குள்ள கோவிலில் மிக சிறப்பாக கருதப்படுவது மகிஷன் வதம் . இந்த மகிஷன் வதம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அந்த நிகழ்ச்சியானது அம்பாள் சன்னதிக்கு முன் ஒரு வாழை மரத்தினை கட்டி 
அந்த வாழை மரத்தினை வெட்டி வன்னி மர இலைகளை கட்டி விடுகின்றனர். இந்த வாழை மரத்தில் மகிஷன் இருப்பதாக வரலாறு.

தீர்த்தம் மற்றும் மரம்:

     இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷமாக வன்னி மரம் உள்ளது. மேலும் தீர்த்தமாக சூரிய தீர்த்தம் உள்ளது. இந்த கோவில் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்ததாக உள்ளது.

விஷே தினங்கள்:

          இந்த கோவிலில் ஆனி  மாதம்பத்து நாள் சிறப்பு பூஜை நடை பெரும். மேலும் தை பொங்கல் , மாசி மகம் கந்தசஷ்டி ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


THEERATHA NOYKALUKKU THEERVU KAANUM AGATHTHEESWARAR THIRUKKOVIL

தீராத நோய்க்கு தீர்வு கொடுக்கும் அகத்தீஸ்வரர் திருக்கோவில்:

      எங்கு உள்ளது:
       இந்த திருக்கோவில் சென்னையில் உள்ள நெமிலிச்சேரி என்ற இடத்தில் உள்ளது.

நடை திறக்கும் நேரம் :
        இக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு முதல் இரவு எட்டு மணி முதல் திறந்திருக்கும்.

ஈசன் மற்றும் அம்பாள் பெயர் :

       இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் அகத்தீஸ்வரர் என்றும் அம்பாள் ஆனந்த வல்லி  என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

கோவிலில் உள்ள மற்றற்ற பெருமை:

        எந்த ஒரு தீராத நோயும் தீர்த்து வைக்கும் வல்லமை பொருந்தியதாக உள்ளது இந்த திருக்கோவில்.

கோவில் வரலாறு :

      பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான அகத்தியர் சிவ பெருமான் மீது மிகவும் தீராத பற்றினாள் இருந்தார். அவர் எங்கு சென்றாலும் அங்கு சிவ பெருமான் ஒன்றை நிறுவி அதனை வைத்து பூஜை செய்வது வழக்கம். அவர் எங்கு சிவ பெருமானை வைத்து வழிபட்டரோ அந்த இடம் அனைத்தும் பெரிய சிவ லிங்கத்தலமாக மாறியது . அப்படி மாறிய தலங்கள் தான் அகத்தியர் வழிபட்ட தலமாக விளங்குகிறது நெமிலிச்சேரியில் உள்ள அகத்தியர் சிவ பெருமான் கோவில்.

நெமிலி பெயர் காரணம் :

         நெமிலி என்ற சொல்லுக்கு மயில் தெலுங்கு மொழியில் மயில் என்ற ஒரு பொருள் உண்டு. செறிவு என்ற சொல்லுக்கு கூட்டம் என்ற பொருள் உண்டுமுன்னொரு காலத்தில் இந்த இடத்தில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இந்த ஊருக்கு நெமிலிச்சேரி என்ற சிறப்பு பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு:

       இந்த கோவிலில் கொடிமரத்திற்கு ஓட்டி விநாயகர் சன்னதி உள்ளத்து. விநாயகர் நர்த்தன விநாயகர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். பிறகு இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தி, முருகர், பிரம்மா ஆகியோர் விளங்குகின்றனர். மேலும் இந்த கோவிலில் விஷ்ணு துர்க்கை உள்ளார். மேலும் இந்த கோவிலில் சந்திரன், சூரியன் , பைரவர் , ஆகியோர் உள்ளனர்.

      இந்த கோவிலில் நவகிரஹங்கள் இருப்பது மிக முக்கிய சன்னதியாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் பிராகாரத்தில் விநாயகர் சன்னதி நால்வர் சன்னதி மற்றும் முருகர் சன்னதி உள்ளது.

கோவில் மற்ற பெருமை:

        இந்த கோவிலில் மிக பெருமையாக கருதப்படுவது சந்திரன் , சூரியன் மற்றும் பைரவர்  மூவரும்  இடத்தில் காட்சி தருவது மிகவும் சிறப்பாக உள்ளது.

வேண்டுதல்கள்:

        இந்த கோவிலில் தீராத வியாதிக்கும் தீர்வு காணப்படுகிறது. பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது ஆடை சார்த்தி வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

          இந்த கோவிலில் தல விருக்ஷமாக அரசமரம் உள்ளது. மேலும் இந்த கோவிலில் தீர்த்தமாக அகத்திய புஷ்கரனி என்ற தீர்த்தம் உள்ளது.

கோவில் பழமை :


        இந்த திருக்கோவில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்ததாக உள்ளது.

KADAN THEERA VAZHIPADA VENDIYA KOVIL :: POONDHOTTAM

கடன் தீர வழி பட வேண்டிய கோவில்:

     கடன் தொல்லை தீரவும், பிள்ளை பேறு பெறவும், திருமண  தடை நீங்கவும்  வழிபட வேண்டிய மிக முக்கிய திருத்தலமாக உள்ளது பத்ரகாளி அம்மன் திருக்கோவில்.

எங்கு உள்ளது:

   இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்த்துள்ளது.

நடை  திறந்திருக்கும் நேரம்:

    இந்த திருக்கோவில் ஆனது காலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர் பெயர்:

     இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாள் பெயர் அஷ்டபுஜ  பத்ரகாளி அம்மன் மற்றும் மாப்பிள்ளை வீராசாமி திருக்கோவில்.

ஸ்தல வரலாறு:

    இந்த கோவிலில் அம்மன் மிகவும் பழங்கால கோவிலாக திகழ்கிறது. இந்த அம்மன் இந்த ஊரையே காப்பாற்றும் தெய்வமாக உள்ளது. முன்னொரு காலத்தில் இந்த ஊரில் அதிகமாக மக்களின் நகை மற்றும் பணம் காணமல் போய் உள்ளது.  மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்வதறியாது இருந்தனர்.

    பிறகு சகலத்திற்கும் சாட்சியாக விளங்கும் மாரி அம்மனை இந்த ஊரில் உள்ள பக்தர்கள் வேண்டி கொண்டனர்.

 அம்மன் மனம் உருகி இந்த ஊரை காபாற்றுவதன் பொருட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு அம்மன் சிலையை நிறுவினர்.

     அந்த அம்மனே காக்கும் தெய்வமாக இந்த ஊரில் உள்ளது. பிறகு அம்மனின் மகிமையை அறிந்த சிலர் இந்த அம்பாளுக்கு கோவில் காட்டி சில சில சிலைகளை நிறுவினர்.

அம்பாள் அமைப்பு:

    இந்த அம்பாள் எட்டு கைகளோடு காட்சி தருவதோடு மட்டும் அல்லது முதல் கையில் அரக்கனின்  தலை,இரண்டாம் கைளில் தீச்சட்டி, மூன்றாம் கையில் சூலம், நான்காம் கையில் கத்தி, ஐந்தாம் கையில் பூ உடைய தாம்பாளம், ஆறவது கையில்  குங்குமத்தை ஏந்திய தாம்பாளம். மற்ற இரு கைகள் பக்தர்கள் அருபாளிப்பதர்க்கு . என்று எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள்.

    மேலும் இந்த அம்பாள் அருகில் சில சிறுவர்கள் மாலையுடன் நிற்பதாக சிற்பங்கள் உள்ளது. அம்பாள் காதில் தூது மற்றும் கழுத்தில்  தாலி, பச்சை நிற உடை, கிரீடம் , மூக்குத்தி ஆகியவற்றுடன் அழகாக  உண்மையான அம்பாள் இருப்பது போன்று காட்சி தருகிறாள்.

மாப்பிள்ளை சுவாமி அமைப்பு:

     இந்த சுவாமி, உட்கார்ந்து இருந்த படி  அழகுடனும்  புன்முருவளுடனும்  அருள்பாலிக்கிறார்கள். மேலும் இந்த ஸ்வாமின் பின் இருவர் காவல் காக்க நிற்கின்றனர்.

பூந்தோட்டம் பெயர் காரணம்:

      முன்னொரு காலத்தில் இந்த ஊரில் அதிகமாக பூக்கள் அதிகமாக மிகுந்த காடு இருந்தது. அந்த காட்டில் இருந்து பூக்களை பறித்து இங்குள்ள கோவில் அனைத்திருக்கும்  மக்கள் அனுப்பி வைப்பார். பிறகு இந்த ஊரில் அந்த காடுகளை அழித்து பல வீடுகளை மக்கள்  அமைத்தனர்.பூக்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த ஊர் பூந்தோட்டம் என்று பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு:

   இந்த கோவில் ஆற்றின் வடக்கு புறம் பார்த்து அமைந்துள்ள கோவிலாக உள்ளது. மேலும் இந்த கோவிலில் இடது புறம் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் தான் சுமார் ஐநூறு பக்தர்கள் வந்து அம்பாளை தரிசனம் செய்யும் விதத்தில் உள்ளது.

     இந்த கோவிலில் பிள்ளையார், கால பைரவர், நாக கன்னி, குதிரையை பிடித்த காவல் தெய்வம், ஆகியோர் அமைந்துள்ளார்.

கால பைரவர்  தோற்றம்:

       கால பைரவர் இங்கு ஒரு குடத்தில் ஒரு அறுபத்தி நான்கு அவதாரத்தில் கிழக்கு பார்த்த படி பக்தருக்கு காட்சி தருவது இந்த கோவிலில் மிக சிறப்பாக உள்ளது. இந்த பைரவரை அஷ்டமி நாளில் வழிபட கடன் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்கள்:

     இந்த கோவிலில் கடன் தொல்லை தீர, திருமண தடை நீங்க, குழந்தை பேரு பெற்றிட இந்த கோவிலில் வந்து மனமார உருகி வேண்டி கொண்டால் நடக்கும் என்பது ஐதீகம்.

     பக்தர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேறிய உடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும் பொங்கல் இட்டும் நிய்வேதனம் செய்கின்றனர்.

     பவுர்ணமி நாளில் வரும் அஷ்டமி நாளில், பூசணிக்காய் அல்லது தேங்காயில்  தீபமேற்றி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றனர்.

திருமண தடை நீங்க அம்பாளுக்கு

கல்யாணத்தில் செய்யும் அலங்காரங்கள் அனைத்தும் அம்பாளுக்கு செய்து தகல் திருமண தடையை போக்கி கொள்கின்றனர்.

ஸ்தல விருக்ஷம்:

     இந்த கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் தல விருக்ஷமாக அரச  மரமும்,வேம்பு மரமும் உள்ளது. சதல தீர்த்தமாக அரசால் மாநதி தீர்த்தம் உள்ளது.