Thanjavur Punnai Nallur Maariyamman temple

தஞ்சாவூர் புன்னை நல்லூர்  மாரி அம்மன்:

    தஞ்சம் அடைபவர்களு நினைத்ததை  நிறைவேற்றும்  புன்னை நல்லூர் மாறி அம்மன். இந்த கோவிலில் அம்மன் இருந்து வாசம் செய்கிறாள்.









எப்படி செல்வது:

     இந்த கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு தஞ்சையில் இருந்து நிறைய பேருந்துகள் உண்டு.

கோவில் நடை திறக்கும் நேரம்:

       இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது  வரையிலும் இருக்கும்.

அம்மன் பெயர்:

    இந்த கோவிலில் உள்ள அம்மன் மாரி அம்மன் என்றும் முத்து மாரி  அம்மன் என்றும் சிறப்பான பெயர்களோடு அழைக்கபடுகிறார். மேலும் இந்த மாறி அம்மனுக்கு துர்கை என்ற சிறப்பு பெயரும் உண்டு.

தல வரலாறு:

    இந்த திருக்கோவில் சுமார் நானூறு ஆண்டுகலுக்கு முன் கட்டப்பட்டது  ஆகும்.முதலில் இந்த தலத்திருக்கு  புன்னை வனம் என்ற பெயரோடு தான்  அழைக்கப்பட்டனர். அனால் இப்போது அது திரிந்து புன்னை நல்லூர் என்று அழைக்கபடுகிறது.

      மற்றொரு தல வரலாறாக கீர்த்தி சோழன் என்னும் மன்னன் இந்த ஊரில் உள்ள அம்பிகையின் அருளால் ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.

அந்த ஆண் குழந்தையின் பெயர் தேவசோழன் . தேவசோழன் வளர்ந்து பின் சோழ பரம்பரையில் அரசராக திகழ்ந்தான். அப்போது தஞ்சையின் மன்னரான வேன்கூஜி என்னும் மன்னர் சமயபுரத்தில் உள்ள அம்மனை தரிசிக்க  வந்தார்.

    அப்போது  தூக்கத்தில்  அவரை யாரோ எழுப்புவது போல் இருந்தது. ஒன்றும் அறியாத மன்னன் மறுபடி நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது ஒரு அசரீரி " தஞ்சையில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புற்று இருப்பதாகவும் அந்த புற்றில் அம்மன் உறைவதாகும்  கூறியது" . திடுக்கிட்டு எழுந்த அரசர் அங்கு சென்று காண புற்று ஒன்று இருந்தது. மேலும் அந்த புற்றில் உள்ள அம்மன் புன்னை வனத்தில் இருப்பதால் அந்த மாரி அம்மனுக்கு புன்னை வன மாறி அம்மன் என்ற பெயரை  சூட்டினர்.
   மற்றொரு வரலாரக 1735 இல் தஞ்சை ஆட்சி புரிந்த மன்னன் துளஜா என்பவரின் மகளுக்கு அம்மை நோய் தாக்கி பெரும் அவதிப்பட்டார். அப்போது இந்த அம்மனை வணங்கியதால் நோய் நீங்கியது. அதலால் பெரும் மகிழ்ச்சி உற்ற மன்னன் அம்மனுக்கு சிறு கோவிலை  மகிழ்ந்தான்.

 தல பெருமை:

    இந்த கோவிலில்  தான் சுயம்புவாகதன்னை நாடி வரும் பக்தருக்கு  காட்சி  புரிகிறாள். இந்த அம்பாள் புற்றில் உள்ளார் என்பது ஐதீகம். இங்கு சதாசிவ பிரம்மாஇந்திரன் என்னும் ஒரு குருவால் ஸ்ரிச்சகரம் தோற்றுவிக்கபட்டது.

இங்குள்ள அம்மன் சுயம்புவாக அருல்பாளிப்பதால்  இந்த அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வதில்லை . தைல காப்பு மட்டுமே போடுகின்றனர் .

வேண்டுதல்கள்:

     இந்த கோவிலில் முக்கியமாக அம்மை நோய் உள்ளார்கள் வந்து வழிபட்டால் சில தினங்களில் நோய் தீரும் என்பது வரலாறு. மேலும் இந்த கோவிலில் .வயிறுவலி, கண்ணில் ஏற்படும் அனைத்து  விதமான நோய்கள்  , திருமாங்கல்ய பாக்கியம் நீடிக்க , நல்ல வேலை கிட்ட , கட்டிகள் குணமாக மேலும்  பல பல தீராத நோய்கள் இருந்தால் இந்த கோவிலில் வந்து மாவிளக்கு இட்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த கோவிலில் மாவிளக்கு இடுதல், பால் காவடி எடுத்தல், திருமாங்கல்யம் கட்டுதல், தொட்டில் கட்டுதல் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

வெல்ல குளம்:
    இ ந்த கோவிலில் மற்ற சிறப்புகளில் ஒன்று குளத்தில் உப்பு கொட்டுதல். கோவிலுக்கு அருகே குளம் ஒன்று உள்ளது அந்த குளத்தில் கட்டி இருப்பார்கள், முகத்தில் பரு அதிகமாக இருப்பவர்கள் இந்த திருக்குளத்தில் உப்பை கொட்டி வேண்டி கொண்டால் சில தினங்களில் மறைந்துவிடுகிறது.

தண்ணீர் நிரப்பும் வேண்டுதல்:

    இந்த கோவிலில் மொத்தம் இரண்டு தொட்டி உள்ளது. உள் பிரகாரத்தில் உள்ளது உள் தொட்டி , வெளி பிரகாரத்தில் உள்ளது வெளி தொட்டி உள்ளது. அம்மை நோய் உள்ளவர்கள் தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் அம்மை நோய் தீரும் .

முத்து மாரி :

    மேலும் இந்த அம்மனுக்கு வெயில் காலங்களில் அம்மனின் முகத்தில் முத்து போன்று வியர்வை துளிகள் காணப்படும். ஆதால் தான் இந்த அம்மன் முத்து மாரி அம்மன்  என்று அழைகப்படுகின்றனர்.

திரு எடயாறு: மருந்தீசர் கோயில்

திரு எடயாறு: மருந்தீசர் கோயில்:

      இந்த திரு எடையாறு கோவில் திரு கோயிலூரே .  இந்த தளம் மலட்டாறு மற்றும்  பெண்ணை நதியின்  குறுக்கே அமைந்துள்ளது. இந்த கோவில் நாடு நாடு கோவில்களில் ஒன்று.
மேலும் இந்த தளத்திருக்கு திரு மருதந்துரை என்ற சிறப்பு பெயரும் உண்டு.

ஈசன் மற்றும் உமையாள் :

   இத்தலத்தில்  வீற்றிருக்கும் சிவனின் பெயர் அருள்மிக் மருந்தீஸ்வரர்  என்றும்  எடையறு நாதர் என்றும்  அம்பிகை ஞானாம்பிகை அம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

தல பெருமை:

    இந்த கோவிலில் சுந்தரர் பதிகத்தை இயற்றினர், மேலும் இந்த கோவிலில் அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஸ்தல வரலாறு:

    ஒரு முனிவர் ஒருவர் கிளி ஒன்றை வளர்த்தார். அவர் அந்த கிளியிடம் கோயிலில் சென்று சிவ ரகசியத்தை கேட்டு வர சொல்லி  அனுப்பினர்.சிவன் தினமும் பார்வதியிடம்  சொல்லும்  ரகசியத்தை கூறியது. ஒரு நாள் அதனை கண்டு கோபம் கொண்ட ஈசன் கிளி முகம் போல் நீ பூமியில் பிறபை என்று சாபம் கொடுத்தார்.

   பிறகு சாபத்தை போக்க வேதா யாசர் ஆகி குழந்தைகளுக்கு கல்வி போதித்து வந்து தனது சாபத்தை போக்கி கொண்டார். அந்த முனிவரின் பெயர் தான் சுக்ஹப்ரஹம ரிஷி .

கோவில் அமைப்பு:

    இந்த கோவிலில் பால கணபதிதக்சின மூர்த்தி, நால்வர், சண்டேஸ்வரர், நாக்ரகாம், முருகர், துர்க்கை, அகஸ்தியர் மற்றும் சுக முனி ஆகியோர் உள்ளனர்.

   பாலா கணபதி கு தனி சன்னதி உள்ளது. பாலா கணபதி நான்கு திருகரங்காலி பெற்றுள்ளார். ஒரு கையில் கரும்பையும் மற்றும் ஒரு கையில் அபாய ஹஸ்தம் பெற்று உள்ளார்.

மேலும் அகஸ்திய முனி ஒரு சிவா லிங்கத்திணை நிறுவினர். ஆதலால் அந்த முனிவரின் பெயரே லிங்கத்திருக்கு சூட் டி அகத்திய லிங்கம் என்ற பெயர் கொண்டது.

முருகர் இந்த தளத்தில் கலியுக ராமபிள்ளையர் என்ற சிறப்பு பெயரோடு விளங்குகிறார்.
சுகப்ரஹம ரிஷிக்கு முக்தி அளித்ததால் இந்த தலத்தில் நிறைய  கிளிகள் காணலாம்.

தீர்த்தம் மற்றும் விருக்ஷம்:


    இந்த திருகோவிலில் தீர்த்தத்தின் பெயர் சிற்றிடை தீர்த்தம் இந்த தீர்த்தம் கிணறில் உள்ளது. மேலும் இங்குள்ள கோவிலில் தல விருக்ஷம் மருதம் மரம்.

Thiruchandrur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவில் ::

    முருக பெருமான் அருள் புரிந்து அருள் வழங்கும் தலங்களின்  மிகவும் முக்கியமானது திருச்செந்தூர் முருகன் கோவில் . இந்த கோவில் முருகனுக்கு மிகவும் உகந்த அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதபடுகிறது.

எப்படி செல்வது:





        தமிழகத்தில் பல்வேறு   மாவட்டங்களில் இருந்தும் இந்த  ஊருக்கு பேருந்துகள் உள்ளது.
கோவில் நடை திறக்கும் நேரம்:    
    
         இந்த  கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் உண்டு.

கோவில் பெருமை:

    இந்த கோவிலில் தான் முருகர் கொடிய அரக்கனாகிய சூரபத்மனை கொன்றது . மேலும் இந்த தலத்தில் உள்ள  கடற்கரையில் அலைகள் வருவதில்லை . மேலும் இந்த கோவிலில் உள்ள முருக பெருமானை மனதார உருகி வழிபட்டால்  நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம் .

ஸ்தல வரலாறு:

      மிகவும் கொடிய குணம் மிக்க அரக்கன் ஒருவன் சூரபத்மன் என்ற ஒருவன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் , இந்திரர்களுக்கும் மிகவும் துன்பம் தருபவனாக திகழ்ந்தான். பின் அவனை அழிப்பதற்கு முருக பெருமான் தோன்றினர். அந்த தலமே திருச்செந்தூர் ஆகும்.
சூரபத்மன் வதம்:
    முருக பெருமான் சூரபத்மனின் தலையை கொய்து தனக்கு சொந்தமான வெற்றி கொடியை  எனப்படும் சேவர்கொடியையும் பார்வதி தேவியின் சூலத்தையும் கையில் வைத்து கொண்டு இங்கு  வரும் பக்தருக்கு மயில் வாகனத்தில் அருள் பாளிக்கிறார் .  
     சூரபத்மனை வதம் செய்வதற்கு உதவி புரிந்த படை வீரர்களை ஐய்யனார் என்று அழைக்கபடுகினர். ஆனால்  அவர்களின் வாரிசுகள் இப்போது பல ஊருக்கு குடி பெயர்ந்துவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

திருச்செந்தூரின் அதிசயம்:

    இந்த ஊரின் மிக அதிசயமாக கருதபடுவது அந்த ஊரில் உள்ள ஒரு கிணறு. அந்த கிணறு நாழிகிணறு என்று அழைக்கபடுகிறது. இந்த கிணறு கடலுக்கு மிக அருகமையில் உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த கிணறில் குளித்து விட்டு பிறகு முருக பெருமானை வழிபட செல்கின்றனர்.

       இந்த குளத்தில் குளிப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்வு ஒன்று உள்ளது.  அரக்கர்களின் மிகுந்த வலிமை படைத்த தாரகாசுரன் மற்றும் சூரபத்மன் என்ற இருவர் மக்களை துன்புறுத்துவதை கொண்டிருந்தார். அப்போது மக்கள் அனைவரும் சிவ பெருமானை  வழிபட்டனர். வடக்கே தாரகசுரனும் மற்றும் தெற்கே சூரபத்மனும் மக்களை துன்புறுத்துவதை நோக்கமாக  
கொண்டிருந்தனர்.

        மேலும் இந்த மக்களை காப்பாற்ற முருகன் இந்த தலத்திருக்கு மயிலாக மாறிய இந்திரனோடு வந்தார்.   முருகருக்கும் அசுரர்களுக்கும் போர் ஐந்து நாட்கள் தொடர்ந்தது. அதில் தாரகசுறன் மட்டும் மடிந்தான். பத்மாசுரன் அஞ்சி கடலுக்கு அடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்னர் அவன் மாமரம் போல் தோற்றம்  கொண்டு மக்களை துன்புறுத்தினான்.

    அதனை கண்ட முருகர் மாமரத்தை ஒரு பகுதியை  சேவலாகவும், பின்னரை மயிலாகவும் மாற்றினர் .   படை வீரர்களுக்கு  தண்ணீர் தேவைபட்டதால் முருகன் கிணறு ஒன்றை வடிவமைத்தார். அந்த கிணறு  அந்த கிணறு  தான்  நாழிகிணறு .

கிணறின் சிறப்பு:

   இந்த கிணறுக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளது.  இந்த கிணற்றின் நீரின் நிறம் கருப்பு நிறம். இந்த கிணற்றின் உள்ள நீரின் சுவை உப்பு. மேலும் இந்த கிணற்ற்றுக்கு அடியில் சுமார் ஒரு அடியில் இன்னொரு கிணறு உள்ளது. அந்த நீரின் சுவை இனிப்பு. ஒரு கிணறில் இரு சுவைகள் உள்ளது இந்த ஊரில் மாட்டுமே .

கோவில் அமைப்பு:


    இந்த கோவிலில் கொடிமரத்தின் கீழ் விநாயக பெருமான்  அருள்பாலிக்கிறார். மேலும் இந்த  கோயிலில் உற்சவர் அம்பாள் கஜலக்சுமி , முருக பெருமான் ஆகியோர் இந்த தலத்தில் இருந்து அருள்பாலிகிரார்கள் .

pasupathi Kovil

பசுபதி கோயில்:

     பகைவர்களை அழிக்கும் வல்லமை பொருந்திய பசுபதி கோவில் . இந்த கோவிலில் சிவா பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் தேவார திருத்தலம் ஆகும்.

எப்படி செல்வது:

    இந்த கோவில் கும்பகோணத்தில் இருந்து சுமார்  பதிநான்கு கிலோ மீட்டர்  தொலைவிலும்,அய்யம்பேட்டைஇல் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
    இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் இரவு பன்னிரண்டு மணி அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

இறைவன் மற்றும் இறைவி:

    இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் பசுபதி நாதர் அல்லது ப்ரஹம புரீஸ்வரர் என்றும் இங்குள்ள அம்பாள் சௌந்தர நாயஜ்கி என்ற பெயரில் அழைக்கபடுகினரர்.

கோவில் சிறப்பு:

   இந்த கோவிலில் வந்து வழிபடும் பக்தருக்கு சகல விதமான நன்மை பயக்கும் என்பது ஐதீகம் . இந்த கோவிலின் பெயர் மாட கோவில்.
சப்த ஸ்தான தலம்  என்று அழைக்கப்படும் கோவில்களில் ஒன்று இந்த தலம் .
கோவில் வரலாறு:

    இந்த திருக்கோவில் மிகவும் பழமை பொருந்திய கோவில் ஆகும். மேலும் இந்த கோயிலில் நந்தி அமர்ந்திருக்கும் மண்டபத்தின் பெயர் திரு புள்ளமங்கை.






    இந்த திருகோயில் ஆனது செங்குட்டுவ சோழனால் கட்டப்பட்ட மாட கோவில் ஆகும்.

கோவில் பெருமை:
    இந்த கோவிலில் உள்ள சிவ லிங்கம் சுயம்புவாக  அருள்பாலிக்கிறார். இந்த கோவிலின் தல விருக்ஷமாக ஆலமரம் உள்ளது. மேலும் இங்கு காவேரி தீர்த்தம், குடமுருட்டி தீர்த்தம், காமதேனு தீர்த்தம் மற்றும் சிவா தீர்த்தம் ஆகியவை உள்ளது.

கோவில் அமைப்பு:

    இந்த கோயில் ஐந்து கொடிமரத்தை கொண்டுள்ளது . மேலும் இந்த கோயிலில் விநாயகர், அகத்தியர், தக்ஷின மூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் பிரம்மன் உள்ளார்.

   மற்ற பிரகாரத்தில் இஷ்னு, நால்வர், துர்டை அம்மன் அமைந்தருளி உள்ளது.  இந்த கோவிலில் பைரவ மூர்த்தியும் உள்ளார்.

கோவில் சிற்பம்:

     இங்கு நிறைய சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. அதில் முக்கியமானது  சிவ லிங்கத்தின் மேல் காமதேனு பால் சுரப்பது போன்ற சிற்பம்.




Thiruvazhampozhil Temple

திருவாலம் பொழில் :

     இந்த திருத்தலத்தில் சிவ  பெருமான் அமர்ந்து பக்தருக்கு வேண்டியதை அருளும் குணம் படைத்தவராக  உள்ளார்.








 எப்படி செல்வது :

    இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்டியிரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு தஞ்சாவூரில் நிறைய பேருந்துகள் உள்ளன .

கோவில் நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி  அதேபோல் மாலை நன்கு மணி முதல் இரவு  எட்டு மணி வரையிலும் உண்டு.

கோவிலில் சிறப்பு:

      இந்த  கோவில் தேவார திருத்தலங்களின் ஒன்று. மேலும் இந்த கோவில் சப்த ஸ்தான ஸ்தலம் என்ற பெருமையுடன் உள்ளது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமான் ஸ்வயம்பு லிங்கமாக அருல்பாளிக்கிறார் .
  
இறைவன்  மற்றும் அம்பாள்:

    இந்த தலத்தில் உள்ள சிவபெருமான் அருள்மிகு அத்மனாதேஸ்வரர் என்றும் அம்பிகை ஞானாம்பிகை அம்மன் என்ற பெயரோடும் அழைக்கபடுகின்றனர்.
    இந்த தளத்தில் உள்ள ஈசனுக்கு பரம்பைகுடி திருவாளம்  பொழில் மகாதேவர் என்ற பெயரோடும் விளங்குகிறார்.
கோவில் அமைப்பு:
   இந்த கோவிலில் ஐந்து ராஜா கோபுரங்களை கொண்டது. மேலும் கோபுரங்களுக்கு மத்தியில் கோடி மரமும் நந்தியும் உள்ளது.

    இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷம் வில்வ மரம். மேலும் இந்த கோவிலில்   உள்ள புனித தீர்த்தத்தின்  பெயர் காவேரி .

இங்கு உள்  பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வனதார், முருகன் வள்ளி தேவனையோடு காட்சி தருகிறார்.  பிறகு மேடை தக்ஷின மூர்த்தி , பஞ்ச லிங்கம் , நால்வர் மற்றும் நடராஜர்  வீற்றிருக்கின்றனர்.

   பிறகு சண்டிகேஸ்வரர், அஷ்டவசுக்கள் இங்கு சிவனை வழிபடுவது போன்று உள்ளது.திருநாவுக்கரசர் இங்கு பதிகம் பாடியுள்ளார்.


Thirukaravasal Temple

திருக்கரவாசல் கோவில் :  திருவாரூர்

     இந்த கோவில் 275 தேவார தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் திருத்துறை பூண்டி யில் உள்ளது.




எப்படி செல்வது:

    இந்த கோவிலுக்கு செல்ல திருவாரூரில் இருந்து பேருந்துகள் உண்டு. திருவாரூர் இல் இருந்து திருத்துறை பூண்டி செல்லும் பாதையி சுமார் பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் அதே போல் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உள்ளது.

சிவன் மற்றும் அம்பாள் பெயர்:

     இங்குள்ள சிவா பெருமான் அருள்மிகு கன்னயீர நாதர் என்றும் அம்பிகை லைலச நாயகி அம்மன் என்றும் அழைகபடுகின்றனர்.

கோயில் சிறப்பு:

    இந்த கோவிலில் சிவ  பெருமான் ஸ்வயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். மேலும் அம்பாள் நின்ற கோலத்தில் பக்தருக்கு அருள் புரிகிறார்.  தேவார திருத்தலங்களில் ஒன்று.

ஸ்தல புராணம்:

      சோழ மன்னர்களில் ஒருவரான  ஒரு சிவ லிங்கத்தை கொடுத்து ஒரு இடத்தில் வைக்குமாறு கூறினார். அந்த லிங்கத்தின் மற்ற சிறப்பு அந்த சிவலிங்கம் தவம் செய்து பெற்ற ஏழு லிங்கங்களில் ஒன்றாகும். அந்த லிங்கத்தை இந்த இடத்தில் சோழ மன்னர் நிறுவினர்.

கோவில் அமைப்பு:

    இந்த கோவிலில் பிரகாரத்தில் பிரமோத விநாயகரும், அகஸ்தீஸ்வரர், இந்திரபுரீஸ்வரர்.  கௌதம லிங்கம், நடராஜ லிங்கம், விஸ்வந்தர் மற்றும் கல்யாண சுந்தரர் காட்சி தருகிறார்கள்.
இந்த கோவிலில் மற்றும் ஒரு சிறப்பாக பைரவர்களாக, கால பைரவர். உட்சிகால  பைரவர் மற்றும் ச்வர்ணகர்ஷ்ன பைரவர்  உள்ளார்கள்.
   இங்கு லக்ஷ்மி தேவி மூன்று பைரவர்களுக்கு முன் அமர்ந்து அருள் புரிகிறார்கள்.

திருக்குள வரலாறு:

   இந்த கோவிலில் உள்ள தீர்த்தத்தின் முன் ஒரு விநாயகர் சிலை உள்ளது. அந்த சிலை பெயர் கடுக்காய் விநாயகர் . இதன் வரலாறாக ஓர் ஜாதிக்காய் விற்பனையாளர் இந்த கோவிலுக்கு பின் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டு  இருந்தார்.அப்போது ஒரு நாள் ஏறவில் ஒரு சிறிய பையன் நீ என்ன விற்பனை செய்தி என்று கேட்க அதற்கு வியாபாரியோ நான்  இன்று அனைத்தையும் விற்று விட்டேன் என்று கூறினார்.

      அதேபோல் மறுநாள் காலையில் எழுந்து பார்தபோது கடுக்கை அனைத்தும் அந்த கூடையில் இருந்தன. அப்போது வியாபாரி வந்தது விநாயகர் என்று  அறிந்தார். அந்த வியாபாரிக்கு விநாயக்ரா காட்சி கொடுத்ததால் அந்த குளத்தில் அருகில் அமர்ந்தார்.

தீர்த்தம் மற்றும் மரம்:

    இந்த கோவிலில் உள்ள திருக்குளத்தில் உள்ள தீர்த்தம் சேஷ தீர்த்தம் என்றும் கிணற்றில் உள்ள தீர்த்தம் பிரம தீர்த்தம் என்றும்  கூறுவார்.

    ஸ்தல விருக்ஷமாக பல மரம் உள்ளது . மேலும் சிவனுக்கே உரத்தான வில்வமரம் உள்ளது.  ஆனால் இந்த வில்வமரத்தில் மட்டும்  ஐந்து இலைகள் உள்ளது. வழக்கமாக மூன்று தான் இருக்கும்.

கோவில் பெருமை:

   இந்த கோவிலில் உள்ள தக்ஷின மூர்த்தி ஞான குரு குன்டலினி சக்தி என்ற அரியவகை சக்தி அவரது தலையில்  உள்ளது. இந்த தலத்தில் தான்  திருநாவுரசர் தனது திரு தண்டக பாடல்களை பாடினர்.